சென்னை அமைந்தகரை அருகே பிரபல தனியார் பியூட்டி பார்லர் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தபோது அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்து கிடைந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மாடியில் ஒருவர், மது போதையில் குறட்டை விட்டு தூங்கியுள்ளார். அவரை எழுப்பி விசாரித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த கிஷோர் (24) என்பதும், கடையில் திருடவந்ததும் தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர்.