கள ஆய்வு: இன்று தூத்துக்குடி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

84பார்த்தது
கள ஆய்வு: இன்று தூத்துக்குடி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (டிச.29) தூத்துக்குடி செல்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார். மாலை 5 மணிக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். நாளை (டிச.30) காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதலமைச்சர், தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தொடர்புடைய செய்தி