மத்தியப் பிரதேசம்: குணா மாவட்டத்தில் பிப்ளியா கிராமத்தில் 140 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 10 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் விழுந்துள்ளான். 39 அடி ஆழத்தில் அந்த சிறுவன் தற்போது இருப்பதாக தெரிகிறது. ஆழ்துளை கிணறுக்கு இணையாக 25 அடி ஆழத்தில் குழி ஒன்று தோண்டப்பட்டு, சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றுக்கு உள்ளே பிராணவாயு செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.