நாவல் பழத்திற்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை இருக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது. ஏனெனில் சர்க்கரை அளவை இது வேகமாக குறைத்துவிடும். கர்ப்பிணி பெண்கள் நாவல்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும். சருமப் பிரச்சனை இருப்பவர்கள், முகப்பரு, கரும்புள்ளி பிரச்சனை இருப்பவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள், செரிமானப் பிரச்சனை உள்ளவர்களும் இந்தப் பழத்தை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.