திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், “நெல்லையில் உள்ள எந்த பள்ளிகளிலும் சாதிய சண்டைகள் இல்லை. ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரே தலையிட்டு முடிவெடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் நடைபெறும் பிரச்சனைகளில் மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ தலையிட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.