விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கணவனை இழந்த பெண் ஒருவர் தனது உறவுக்கார ஆண் நபருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் மற்றும் திலீபன் ஆகியோர் வீடியோ எடுத்து மிரட்டி 1000 ரூபாய் பணம் பறித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணை மீண்டும் தொடர்புகொண்ட அவர்கள், தங்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் பயந்துபோன அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஜெகதீஸ் மற்றும் திலீபனை போலீசார் கைது செய்துள்ளனர்.