மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே உலகில் வாழ்ந்த உயிரினங்களாக டைனோசர்கள் இருக்கின்றன. உலகின் பல பகுதிகளிலும் டைனோசர்களின் எச்சங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சீனாவில் சமீபத்தில் 19.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஆர்க்கியோசர்கர் ஆசியாடிகஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் உயரம் மட்டுமே வளரும் இது தாவர உண்ணி வகையைச் சேர்ந்தது.