சென்னை: நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம், அவர் முழு பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜன.05) நடந்த 'மதகஜராஜா' பட நிகழ்ச்சியில் விஷால் உடல் சோர்வுடன் காணப்பட்டது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்த நிலையில் அறிக்கை வெளியாகியுள்ளது.