குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்ட உணவுகளை உண்ண மருத்துவர்கள் அறிவுறுத்துவதை கேட்டிருப்போம். உண்ணப்பட்டவுடன் அது எவ்வளவு வேகமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பதுதான் அந்த உணவின் கிளைசீமிக் குறியீடு ஆகும். தற்போது அரிசியில் தான் கிளைசீமிக் குறியீடு அதிகமாக உள்ளது. எனவே தான் அரிசி உணவு சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. குறைவான கிளைசீமிக் குறியீடு கொண்ட அரிசி உணவுகளை உருவாக்க விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.