HMPV வகை தொற்று ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளது தான். புதிதாக உருமாறிய HMPV வகை தொற்று எதுவும் தற்போது தமிழ்நாட்டில் பரவவில்லை என மருத்துவத்துறை விளக்கமளித்துள்ளது. மேலும், HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இந்த வைரஸ் பெரும்பாலும் குழந்தைகள், பெரியவர்களை தாக்கும், அது குறித்து பதற்றம் அடைய தேவையில்லை என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.