மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லுாரில் 6000 ஏக்கரில் நாற்று நடவு முடிந்துவிட்டது. தற்போது களை எடுக்கும் நேரம் வந்துவிட்டதால், அதற்கான ஆட்கள் கிடைக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அனைவரும் நுாறுநாள் வேலை திட்டப் பணிக்குச் சென்றுவிடுவதால், களை எடுக்க 5 பேர் கூட கிடைக்கவில்லை எனவும் களை எடுக்காவிட்டால் பயிர்களின் வளர்ச்சி தடைபட்டு மகசூல் பாதிக்கப்படும் என வேதனை தெரிவிக்கின்றனர்.