அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்டம், கம்பம் & உத்தமபாளையம், இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்பாளர்களிடையேயான ஆலோசனைக் கூட்டம் நேற்று(செப். 29) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்வரும் அக். 2ம் தேதி தேனியில் மாவட்ட பிரதிநிதிகள் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மாநாட்டில் பதிவு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.