தேசிய மக்கள் நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகள் முடிவு

66பார்த்தது
தேசிய மக்கள் நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகள் முடிவு
பெரியகுளம் வட்டச்சட்ட பணிகள் குழு சார்பாக பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது இதில் பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி S. சமினா பெரியகுளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி A. கண்ணன் பெரியகுளம் நீதித்துறை நடுவர் K. கமலநாதன் பெரியகுளம் வட்டச் சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் V. முருகன் பெரியகுளம் வழக்கறிஞர் சங்க தலைவர் K. பாலாஜி செயலாளர் K. நாராயணசாமி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் சொத்து சம்பந்தமான வழக்குகள் மோட்டார் வாகன விபத்து காசோலை உள்ளிட்ட வழக்குகள் உள்பட 135 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் 93, 29716. ரூபாய் இந்த தேசிய மக்கள் நீதிமன்ற பணிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பெரியகுளம் வட்டச் சட்ட பணி குழு செய்திருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி