திறந்தன பள்ளிகள்! சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள்

55பார்த்தது
திறந்தன பள்ளிகள்! சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள்
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 10) பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டன. இதையடுத்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திறந்தன பள்ளிகள் சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள், ஆசிரியர்களே! பிள்ளைகளுக்குப் பெற்றோராகுங்கள்.. பெற்றோர்கள்
ஆசான்களாகுங்கள்.. ஆணிகள் அறையாதீர்கள், முற்றாத மூளைகளில். அறிவு பின்பு, அன்பு முன்பு.. இடைவெளியின் வெற்றிடத்தை, இதயத்தால் நிரப்புங்கள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி