சிக்கிம் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்.!

57பார்த்தது
சிக்கிம் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பிரேம் சிங் தமாங்.!
சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றி சிக்கிம் கிரந்திக்காரி மோர்ச்சா அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர உள்ளது. இதன் தலைவர் பிரேம் சிங் தமாங் 2வது முறையாக முதல்வராக இன்று(ஜூன் 10) மாலை பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் லக்ஷ்மணன் ஆச்சார்யா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி கொண்ட சிக்கிமிலும் பிரேம் சிங் தமாங் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி