தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பஸ் நிலைய பிரிவில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளதாலும், ஹோட்டல்களின் முன்பு விறகுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதாலும், பயணிகள் சாலையின் நடுவே நிற்பதாலும், அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது.
அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு கடைகள் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்படுவதால் பஸ்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. உயிர்ப்பலி ஏற்படும் முன், போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.