பெரியகுளம் நகர மன்ற கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது

70பார்த்தது
பெரியகுளம் நகராட்சி அலுவலர்களுக்கும் கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் மதன்குமார் தனது வார்டு பகுதியில் நான்கு நாட்களாக குடிநீர் வரவில்லை என கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
நகராட்சி பொறியாளர் ரமேஷ் உங்கள் வார்டு பகுதியில் முறையாக வீட்டு வரி செலுத்தாததால் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்ய முடியாது என தெரிவித்தார். இதனால் நகர்மன்ற உறுப்பினருக்கும் அதிகாரிக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.
உடனடியாக நகர மன்ற தலைவர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் இந்த வாக்குவாதத்தால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி