அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

4241பார்த்தது
அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
தேனி மாவட்டம் கூடலூர் எல்லைத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது52) கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் தற்போது கம்பம் உத்தமபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை காந்தி சிலை இருந்து வீட்டிற்கு தனது டிவிஎஸ் மோட்டார் சைக்கிளிளை ஓட்டி சென்றார். அப்போது கம்பம் அரசமரம் அருகே சென்றுகொண்டிருந்த போது பின்னால் குமுளியிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோதியது இதில் மோட்டார் சைக்கிளிலில் தூக்கி வீசப்பட்ட தங்கம் தலையில் பலத்த காயயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அரசு பஸ் டிரைவரான ஆண்டிபட்டி அருகேயுள்ள கன்னியப்பிள்ளைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா(38) என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி