சுருளி அருவியில் சாரல் திருவிழா நிறைவடைந்தது

84பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த நான்கு தினங்களாக சாரல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது, இறுதி நாளான இன்று சிறப்பு அழைப்பாளராக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்,

அதில் சுருளி மாலை என்பது பழமையான ஆன்மீக தலமாகவும் சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது, இங்கு அரிய வகை பல்வேறு மூலிகை செடிகள் வனப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது, ஆகையால் தமிழக முதல்வர் சுருளி அருவிப்பகுதியில் மூலிகை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சஜிவன, உத்தமபாளையம் கோட்டாட்சியர் தாட்சாயினி, ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், தேனி மாவட்ட சுற்றுலா வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், மற்றும் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, வனத்துறை மற்றும் இயற்கை உணவு சார்ந்த பொருள்கள் கண்காட்சிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம் பரதநாட்டியம், அரசு பள்ளி மாணவ மாணவிகள் நடனம் பரவசப்படுத்தியது மேலும் இந்த சாரல் விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கலந்து கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை கண்டு கழித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி