ஆட்டோ திருட்டு: போலீசார் விசாரணை

83பார்த்தது
ஆட்டோ திருட்டு: போலீசார் விசாரணை
தேனி மாவட்டம், போடி சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பாசித், (37). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர், வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது ஆட்டோவை காணவில்லை. இது குறித்து விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால், போடி டவுன் காவல் நிலையத்தில் பாசித் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி