புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப்பணி குறித்து, திமுக அரசை கடுமையாக விமர்சித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்ற மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததில்லை. எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்களின் முயற்சிகள் இனிவரும் காலங்களில் தோற்றுப் போகும்" என தெரிவித்துள்ளார்.