நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த நிலையில் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்சூர் அலிகான் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.