தமிழ்நாடு முழுவதும் 1,200 பெண்கள் தங்கும் வகையில் மேலும் 6 இடங்களில் 'தோழி மகளிர் விடுதிகள்' அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் 2 இடங்களில் 950 பேர் தங்கும் வகையில் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு விடுதி அமைய உள்ளது. இதற்கு ரூ.70 கோடி செலவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.