நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான Maruti Suzuki, இதுவரை இல்லாத அளவாக ஆண்டின் தொடக்கத்திலேயே 2,12,251 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 2024ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 1,99,364 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதேபோல், டாடா மோட்டார்ஸ் விற்பனையில் சரிவைக் கண்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது. கியா நிறுவனம் 25,025 யூனிட் விற்பனையைப் பதிவு செய்துள்ளது.