கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைக்கு, மதுபிரியர்கள் சென்றுள்ளனர். அங்கு, இரண்டு குவாட்டர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அதில் ஒன்றின் வாய் பகுதி உடைந்து, கண்ணாடி துகள்கள் மதுவின் உள்ளே கலந்த நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டதற்கு, வடிகட்டி எடுத்துவந்து கொடுத்து, மதுவை வடிகட்டி குடித்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.