தவெகவின் 2-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது தவெக தொண்டர்கள் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வெற்றிமாறன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா? என கேள்விகள் எழத் தொடங்கியுள்ளது.