உ.பி: சமாஜ்வாதி எம்பி கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 22 வயது தலித் பெண் வாய்க்கால் அருகே உடலில் துணியின்றி சடலமாக மீட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத், "படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வேன்" என்று கண்ணீர் விட்டு அழுதபடி கூறியுள்ளார்.