தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையில் 9ஆம் வகுப்பு மாணவன் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு விடுதி காப்பாளராக இருக்கும் ராமச்சந்திரன் என்பவர் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதை அந்த மாணவன் அவரது தந்தையிடம் கூறியதையடுத்து அவரது தந்தை மயிலாடும்பாறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலிசார் விடுதி காப்பாளரை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.