தேனி அருகே பதவியேற்பு விழா

75பார்த்தது
தேனி அருகே பதவியேற்பு விழா
தேனி மாவட்ட ஏர்கண்டிசனர் இன்ஜினியர் அசோசியேசன் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜஸ்டின்சார்லி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன், துணைச் செயலாளர் கார்த்திக், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். பொருளாளர் ராஜாமணி வாழ்த்துரை வழங்கினார். இப்பதவியேற்பு விழாவில் உறுப்பினர்கள் அடையாள அட்டை மற்றும் காலண்டர்கள் வழங்கப்பட்டது. மாதத்தின் 1-வது சனிக்கிழமை செயற்குழுகூட்டமும், ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டமும் நடத்தவும், சங்கத்திற் கான வங்கிக்கணக்கு துவக்கவும், உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 இலட்சத்திற்கான விபத்துக்காப்பீடு பெற்றுத்தரவும் கூட்டத்தில் இத்துடன் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், தணிக்கையாளர், ஆலோசனை குழு தகவல் தொழில்நுட்ப பிரிவு, சட்ட ஆலோசகர்கள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி