கூடலூரில் கனமழை சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி
தேனி மாவட்டம் கூடலூர், லோயர் கேம் பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் உயர்ந்து வருவதால் மானாவாரி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.