பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டர், 21 வயது பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஜானி தாக்கல் செய்த மனு இன்று (அக் 25) தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜுவாடி ஸ்ரீதேவி, ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.