கூடலூரில் அதிமுக செயல்வீரர் கூட்டம் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்கு உள்பட்ட கூடலூர் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை துணை முதல்வராக நியமித்தது போல திமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர் துரைமுருகனையும் துணை முதல்வராக நியமிக்க முடியுமா? என சவால் விடுத்து, அவர்களால் அது முடியாது திமுக குடும்ப ஆட்சி கட்சி என தெரிவித்தார்.
மேலும் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.