தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (செப்.,23) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 319 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் அடிப்படை வசதி கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இருந்தனர்.