மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திருட்டு நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, இன்று (டிச.05) மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த, மாநகராட்சி கவுன்சிலர் கிரிதரனின் விலை உயர்ந்த செல்போன் மற்றும் மூவரின் செல்போன்களும், 2 பேரின் பர்ஸும் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து, அண்ணா சதுக்கம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.