இளைஞரின் வயிற்றில் இருந்து உலோகப் பொருட்கள் நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் தனியார் மருத்துவமனையில் 22 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து ஏராளமான உலோகப் பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மனநல சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து 2 சாவிகள், மோதிரம், 4 அங்குல நீளமுள்ள கத்தி, 2 நகவெட்டிகள் உள்ளிட்டவற்றை நீக்கியுள்ளனர்.