பாடகரை கட்டிப்பிடித்த பெண் போலீஸ் சஸ்பெண்ட்.. (வீடியோ)

25225பார்த்தது
பிரபல அஸ்ஸாமி பாடகர் ஜூபீன் கர்க் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது, ​​திடீரென மில்லிபிரபா சுடியா என்ற பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மேடைக்கு சென்றார். அவரது பாடல்களைக் கேட்டு மெய் சிலிர்த்த கான்ஸ்டபிள், ஜுபீன் கர்க்கை மேடையிலேயே கட்டி அணைத்து முத்தமிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், கான்ஸ்டபிள் மில்லிபிரபா சுடியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி