கேரளாவில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் ஏற்கனவே 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 1,977 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்களுக்கு இன்று (மே 16) மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மாவட்டங்களில் வைரஸை கட்டுப்படுத்த கள அளவில் துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.