வேறு பெண்ணுடன் தொடர்பு: தந்தையின் பல்லை உடைத்த மகன்

22428பார்த்தது
வேறு பெண்ணுடன் தொடர்பு: தந்தையின் பல்லை உடைத்த மகன்
சென்னை: புழல் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (46); கட்டுமான பொருட்கள் சப்ளையர். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கோவிந்தனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே கோவிந்தனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் உள்ளார்.

இதனால், தந்தையின் மீது, மூத்த மகன் குப்புசாமிக்கு (26) வெறுப்பு ஏற்பட்டது. அவர், கடந்த 14ஆம் தேதி வினாயகபுரம் அருகே, தனது தந்தையை சந்தித்தார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரமடைந்த குப்புசாமி, அங்கிருந்த உருட்டு கட்டையால் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில், கோவிந்தனின் பல் உடைந்தது. பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புழல் போலீசார், நேற்று (மே 15) குப்புசாமியை கைது செய்தனர்.