தவெக கட்சிப் பணிகளை வேகப்படுத்த விஜய் உத்தரவு

11949பார்த்தது
தவெக கட்சிப் பணிகளை வேகப்படுத்த விஜய் உத்தரவு
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, தமிழக வெற்றிக்கழக கட்சிப் பணிகளை வேகப்படுத்த நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். 10, 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள ஊக்கத்தொகை வழங்க தகுதியான மாணவ, மாணவிகளை 10 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதில், 1,500 பேருக்கு தலா ரூ.5,000 வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்டது போல் குளறுபடிகள் இந்த ஆண்டு இருக்க கூடாது என்றும் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதிக்கு முன்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவும் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அதே போல் கட்சியின் பிரம்மாண்ட முதல் மாநாடு மதுரையில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது. அதில் கட்சி கொடி, கொள்கைகள், அரசியல் முடிவுகள் பற்றி அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி