மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்

72பார்த்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்
சுதந்திர தினத்துக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்பில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடரும். குடகு, சிக்மகளூரு, ஹாசன், வயநாடு மாவட்டங்களிலும், வால்பாறை, நீலகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (ஜுலை 25) ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி