உத்தரகாண்டில் உள்ள பன்சிநாராயணன் கோயிலின் சிறப்பம்சம் என்னவெனில் வருடத்தில் ஒருநாள் மட்டும் தான் திறந்திருக்கும். அதுவும் ரக்ஷா பந்தன் தினத்தில் தான். சகோதரத்துவத்தை கொண்டாடும் இந்நாளில் திறக்கப்படுவதாலோ என்னவோ ஆண்களை விட பெண்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த தினத்தில் பெண்களும், சிறுமிகளும் விஷ்ணுவுக்கு ராக்கி கட்டி தங்கள் எதிர்காலம் மற்றும் குடும்பத்திற்காக ஆசி பெறுகின்றனர்.