சிங்கங்கள் நம் நாட்டில் இருக்கும் போது ஏன் புலிகள் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். பொதுவாக சிங்கங்கள் குஜராத் மாநிலம் அருகே கிர் காடுகளில் மட்டுமே வசித்து வருகின்றன. ஆனால் புலிகள் இந்தியாவில்16 முதல் 17 மாநிலங்களில் வசித்து வருகின்றன. இதுவும் புலிகளை தேசிய விலங்காக அறிவிக்க முக்கிய காரணமாக உள்ளது. உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய புலிகளில் 80 சதவீதம் இந்தியாவில் மட்டுமே உள்ளன.