சவுதியில் தோன்றிய ரமலான் பிறை

59பார்த்தது
சவுதியில் தோன்றிய ரமலான் பிறை
இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களின் தாயகமான சவுதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிறை காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள 180 கோடி இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு பிறை பார்த்ததால், இன்று முதல் நோன்பு தொடங்குகிறது. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற ஆசிய நாடுகளில் பிறை நிலவு காணப்படவில்லை.

தொடர்புடைய செய்தி