முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்!

59பார்த்தது
முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் “கலைஞர் 100" திரைத்துறையின் மாபெரும் கலைவிழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிர்வாகிகள் வழங்கினர். சென்னை முகாம் அலுவலகத்தில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அப்போது, துணைத் தலைவர் பூச்சி முருகன், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், கதிரேசன், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி