நடுவானத்தில் வேகமாக குலுங்கிய விமானம்! அலறிய பயணிகள்

78பார்த்தது
நடுவானத்தில் வேகமாக குலுங்கிய விமானம்! அலறிய பயணிகள்
காற்று கொந்தளிப்பு எனப்படும் ஹேர் டெர்புலன்சில் சிக்கி கத்தார் ஏர்வேஸ் விமானம் நடுவானில் குலுங்கிய சம்பவம் துருக்கி வான் பகுதியில் நிகழ்ந்துள்ளது. கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து அயர்லாந்து தலைநகரான டுப்லினுக்கு புறப்பட்ட விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பெண் ஊழியர்கள் இருந்தனர். காற்றின் திசை வேகத்தில் ஏற்பட்ட திடீர் மாறுபாட்டால் சுமார் 20 வினாடிகள் விமானம் வேகமாக குலுங்கி சில 100 அடிகள் கீழே இறங்கியது, இதனால் உள்ளிருந்தவர்கள் அலறிய நிலையில் 6 பயணிகள் மற்றும் 6 பெண் ஊழியர்கள் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி