பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்

70பார்த்தது
பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற  தாய்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே நடந்த ஆணவக் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்கவி (20) என்ற பெண் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச் 19) பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றபோது, ​​பார்கவி தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த பெண்ணின் தாய், பார்கவியின் நடத்தையை ஜீரணிக்க முடியாமல், கோபத்தில் பார்கவியை தாக்கி, சேலையால் அவரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி