போதையில் நண்பனை கொலை செய்தவர் கைது

539பார்த்தது
போதையில் நண்பனை கொலை செய்தவர் கைது
திண்டுக்கல் வத்தலகுண்டைச் சேர்ந்த ஆனந்தகுமார் (40) மற்றும் நாகராஜ் (30) ஆகியோர் நேற்று இரவு (ஏப்ரல் 16) ஒன்றாக மது அருந்தியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை ஆனந்தகுமார் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆனந்தகுமாரின் கழுத்தை இறுக்கி நாகராஜ் கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து நாகராஜை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி