சஜீத் ஏ இயக்கத்தில் கிஷோர் மற்றும் ஸ்ருதி மேனன் நடிப்பில் உருவான படம் ‘வடக்கன்’. இந்த படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய பிரம்மயுகம் இயக்குநர் ராகுல் சதாசிவன், “வடக்கன் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரம் மகிழ்ச்சியளிக்கிறது. திரில்லர் படங்களுக்காக கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மலையாள சினிமாவில் இருப்பதற்கு பெருமை சேர்த்துள்ளது" என கூறியுள்ளார்.