வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கு புத்தகங்கள், நூறு நாள் வேலைத்திட்ட பணி அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் உள்ள ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், எம்எல்ஏ, எம்பிக்களுக்கான அலுவலக அடையாள அட்டை ஆகியவையே பயன்படுத்தி வாக்களிக்கலாம். அதே நேரம் பூத் ஸ்லிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது.