கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பேருந்தின் கதவருகே நிற்க வேண்டாம் என கூறியதற்காக பேருந்து நடத்துநர் யோகேஷ் என்பவரை, ஹரியானாவைச் சேர்ந்த ஹரிஷ் சின்ஹா கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுனர் அந்த இளைஞரை உள்ளேயே வைத்து பேருந்தின் கதவுகளை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கைது செய்து விசாரித்ததில் வேலையை இழந்த ஹரிஷ் உணவுக்காக அலையாமல் சிறைக்கு செல்ல இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.